உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் இன்று அரசுக்கு எதிராக மக்கள் பேரணி…


அரசின் தற்போதைய வேலைத்திட்டங்களுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்கள் சக்தி படை’ எனும் தொனியில் மக்கள் பேரணி என்பன இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி, விஹாரமகாதேவி பூங்கா வரையில் சென்று, அங்கு மக்கள் சந்திப்பை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒன்றிணைத்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த இந்த எதிர்ப்பு போராட்டம் மற்றும் பேரணி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு ஒன்றிணைந்த எதிர் கட்சியின் உறுப்பினர்களால், நேற்று(01) மாலை கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு

wpengine

அரை சொகுசு பஸ்களுக்கு ஆகஸ்ட் கடுமையான புதிய சட்டங்கள்.

wpengine

ஈஸ்டர் தாக்குதலின் பின் கோட்டா ஜனாதிபதியாகுவர் என சஹ்ரான் அறிந்திருந்தால், கோட்டாவை கட்டிப்பிடித்தவாறு வெடித்திருப்பார்..!

wpengine