உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பில் இன்று சில வீதிகளில் போக்குவரத்து மட்டு…



மரதன் சைக்கிளோட்டம் மற்றும் நீச்சல் போட்டி ஆகிய மூன்று சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு இன்று(25) கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கோட்டை கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களிலுள்ள வீதிகளை உள்ளடக்கிய வகையில் இவை நடைபெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த வீதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை, ஷையித்தியா வீதி, காலிமுகத்திடல் வீதி, காலி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி சந்தி வரையிலும், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலைய வீதி மற்றும் கரையோர வீதியில் வெள்ளவத்தை வீதி வரையிலும் வாகனப் போக்குவரதது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

கன்சியூலர் பிரிவின் சேவைகள் ஆரம்பம்

wpengine

அரச ஊழியர்களுக்கான புதிய ஊதியத் திட்டத்தைத் தயாரிக்க தீர்மானம்…

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் ஆஸிக்கு வெற்றி

wpengine