உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து வரையறை…



கொழும்பின் சில வீதிகளில் வாகன போக்குவரத்து நாளை(25), அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கோட்டை சைத்திய வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து கொள்ளுபிட்டிய சந்தி வரையான வீதி மற்றும் கொள்ளுபிட்டியில் இருந்து வௌ்ளவத்தை வரையிலான மெரைன் டிரைவ் வீதி ஆகியனவே இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிக்கின்றார்.

சர்வதேச மரதன் போட்டி நாளை(25) இடம்பெற இருப்பதாலேயே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

 

#rishma

Related posts

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

நீர்கொழும்பு – கட்டுநாயக்க இடையிலான ரயில் சேவை இன்று இடம்பெறாது..

wpengine

அரசியலமைப்புச் சபை இன்று கூடவுள்ளது…

wpengine