உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு18 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு…



பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை(15) நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்​பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாகன விபத்தில் ஒருவர் பலி – 06 பேர் காயம்

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யக் கூடும்…

wpengine

அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…

wpengine