உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று(12) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிணை முறி மோசடி விசாரணைகளில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி…

wpengine

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு விசாரணையில் இருந்து நீதிபதி ஒருவர் விலகல்

wpengine

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஞாயிறன்டு வெளியிடும் சாத்தியம்

wpengine