விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | துபாய்) -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.

அதன்பின் 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தீப் சிங் 56 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி

wpengine

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று…

wpengine

இலங்கை ரசிகர்களின் ஆதரவுடன் சுதந்திர கிண்ணத்தினை இந்தியா அணி கைப்பற்றியது…

wpengine