உலக செய்திகள்

கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு…



கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடத்தில் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது.

இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் கட்டுமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கு ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 53 இராணுவ வீரர்கள் பலி

wpengine

டிக்டாக் மீதான தடையை நீக்க உயர் நீதிமன்றம் அனுமதி

wpengine

பிரேஸில் ஜனாதிபதிக்கு கொரோனா

wpengine