உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளதாக சீனா நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

நேற்றைய தகவலின்படி, சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 1,011 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,113 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஐந்தாவது முறையாகவும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்…

wpengine

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

wpengine

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்ந்தது

wpengine