உள்நாட்டு செய்திகள்

கடல்மார்க்க பயணிகளை தரையிறக்க இலங்கை தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று(03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இன்று தொடக்கம் பயணிகள் கப்பல்களின் பயணிகளை தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் சொகுசு கப்பல் ஒன்று இலங்கைக்கு வர இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் திறப்பு

wpengine

அதி சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுடன் இருவர் கைது

wpengine

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen