உள்நாட்டு செய்திகள்

கொரோனா பரவல் குறைவடைய வாய்ப்புகள் அதிகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அதன் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பி.சி.ஆர்.பரிசோதனைகளில், அவர்களது மாதிரிகளில் கொரோனா வைரஸின் செறிமானம் குறைவாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் காலத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்…

wpengine

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine

கொள்ளையர்களை நண்பர்களாக்கும் கச்சிதமான கையாளுகையின் முத்திரை நயீமுல்லாஹ்!

wpengine