உலக செய்திகள்

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக ஜனாதிபதி டொனால் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்கிறேன். இந்த நடவடிக்கையின் 50 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த 8 வாரங்கள் வைரசை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான தருணங்களாகும்’’ என்றார்.

மேலும் உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,043 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாதை மாறிப்போன கப்பலால் நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

wpengine

கோட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ கைது

wpengine

ஆளும் கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களது தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவு…

wpengine