உள்நாட்டு செய்திகள்

கொரோனா : அன்டிஜென் பரிசோதனை அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 (கொரோனா) தொற்றினை கண்டறிவதற்கான புதிய விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய விரைவான ஆன்டிஜென் சோதனை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போது நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பி.சி.ஆர் சோதனை தொடர்பாக நிலவிய பிரச்சினைகள் இப்போது சரிசெய்யப்பட்டு, தற்போது அதிகபட்ச அளவில் நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

மட்டு – பொலன்னறுவை ரயில் சேவை பாதிப்பு

wpengine

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு!

News Editor

கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட கோரிக்கை…

wpengine