உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – நிலைமை மேலும் மேலும் மோசமாகும் 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகின் சில நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்று மேலும், மேலும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. நிறைய நாடுகள் தப்பான பாதையில் செல்கின்றன என்றும் ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. இந்நிலையில், பல அரசுகளின் மற்றும் மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று மேலும் மேலும், மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

Related posts

உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா

wpengine

உலகளாவிய ரீதியில் ஏழாயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

wpengine

இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்…

wpengine