ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனாவை அடுத்து சீனாவில் ஹன்டா வைரஸ்; ஹன்டா வைரஸ் என்றால் என்ன ?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்கும்போது சீனாவில் மீண்டும் ஹன்டா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது, ஒருவர் இறந்தார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு

ஹன்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பஸ்ஸில் பயணித்த 32 பேரையும் வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

குறித்த வைரஸ் தற்போது பிரான்சிலும் பரவி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் இருக்கும் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அங்கு இருக்கும், பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.

நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Image

ஹன்டா வைரஸ் இந்த வைரஸ் ஒரு ஆட்கொல்லி வைரஸ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கொரொனா போன்று மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. இவை பொதுவாக எலிகள் மூலமே மனிதர்களிடம் பரவுகிறது.

நாய் பூனைகள் மூலம் இந்த நோய் பரவ முடியுமா என்று உலகில் பல பல ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும், இதுவரை இவ்விலங்குகள் மூலம் இந்த நோய் பரவ முடியும் என்பது கண்டறியப்படவில்லை. ஆனால் நாய்கள்,பூனைகள் இந்த நோயை காவும் விலங்குகளை பிடிக்கும்போது மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அனேகமாக எலிகளின் சிறுநீர் மனிதர்களிடம் படும்போது இந்த நோய் மனிதனிற்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அத்துடன் அண்மைய ஆய்வுகள் எலிகளால் பாதிக்கப்பட்ட உணவுகளை உண்பதன் மூலமும் இந்த நோய் ஏற்படலாம் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.

அனேகமாக காடுகள் ,விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் பரவுவது என அறியப்பட்டு இருந்தாலும் ,அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் ஒரு வகை சிறிய எலி மூலம் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

சோர்வு ,காய்ச்சல் மூட்டு வலி ,இடுப்புப் பகுதிகளில் வலி, போன்றன இதன் ஆரம்ப அறிகுறிகளாக ஏற்படும்.

அத்துடன் தலைவலி ,வாந்தி எடுத்தல் வயிற்று வலி ,பேதி போன்ற நிலைமைகள் இதனால் ஏற்படும்.

10 நாட்களின் பின்பு கடும் இருமல் ,சுவாச சிரமம் ,நுரையிரலில் திரவம் நிறைதல் போன்ற ஆபத்தான நோய் அறிகுறிகள் ஏற்பட்டு மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடியது.

இது பயங்கரமான நோய்.கொரொனாவை விட பயங்கரமானது, ஏனெனில் இதன் இறப்பு வீதம் 38% .

என்றாலும் மிக அரிதாகவே மனிதனிலிருந்து மனிதனுக்கு இந்த நோய்த் தொற்றுதல் ஏற்படுகிறது. (1996 ஆம் ஆண்டு மனிதனில் இருந்து மனிதனிற்கு பரவுவதாக ஆஜன்டைய்னாவில் பதிவாகியுள்ளது)

எனவே இது ஒரு Pandemic ஆக ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

 

Related posts

GMOA வைத்தியர்களுக்கு மூளை சரியில்லை என நினைக்கிறேன் – லக்ஷ்மன்…

wpengine

மஹிந்தவுக்கு வீடு செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது நான் என ஜனாதிபதி மைத்திரி 2016 ஏப்ரல் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக… [Video]

wpengine

எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து ஒருவர் பலி…

wpengine