Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனாவுக்கு ஐவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489ஆக அதிகரித்துள்ளது.

உஸ்ஸாபிட்டிய பகுதியை சேர்ந்த 53 வயது பெண், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது பெண் மற்றும்
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று முதல் இ.போ.ச ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்…

wpengine

பிரதமர் மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு…

wpengine

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

wpengine