உள்நாட்டு செய்திகள்

கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு செயல்முறை மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்ட கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் இறுதி பெறுபேறுகள் இன்று(22) வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.slbfe.lk என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிட்சை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானதுடன் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் தயாரிப்பு நிர்மாணத்துறை மற்றும் கடல் தொழில் ஆகிய துறைகளின் கீழ் கணினி அடிப்படையில் (Online) நடைபெற்றது.

குறித்த பரீட்சைக்கு 3,319 பரீட்சைத்திகள் தோற்றியிருந்ததுடன், இவர்களுள் 2,411 பேர் சித்தி அடைந்தனர்.

இலங்கை அரசாங்கம் மற்றும் கொரிய அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இந்த தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.

Related posts

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா

wpengine

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 07 பேர் STF இனால் கைது…

wpengine

வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர், முன்னாள் சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து கோப்பு ஒன்றை திடுடிச் சென்றார்

News Editor