உள்நாட்டு செய்திகள்

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை



(FASTNEWS|COLOMBO) நேற்று ஆரம்பமான கொரிய மொழி தேர்ச்சி பரீட்சை வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் தவிர்த்து எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி வரை நடைபெறுகிறது.

கணனி மூலம் மாத்திரம் இந்தப் பரீட்சை நடத்தப்படுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலக்கம் 205, தெபானம, பன்னிப்பிட்டிய என்ற முகவரியில் அமைந்துள்ள கொரிய கணனி பயிற்சி மத்திய நிலையத்தில் இந்தப் பரீட்சை நடைபெறுகிறது.

பரீட்சை இடம்பெறும் தினம், நேரம், பரீட்சை மத்திய நிலையம் என்பன தொடர்பான விபரங்களை பரீட்சார்த்திகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு

wpengine

வாக்களிப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்த வாக்காளர் கைது

wpengine

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் குழு இலங்கைகு வர உள்ளது

wpengine