ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொட்டதெனிய சிறுமி கொலை குறித்து விசாரணை செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்


கொட்டதெனிய பிரதேசத்தில் நான்கரை வயதான சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டதெனிய பிரதேசத்தில் சிறுமியின் கொலையாளிகளை கைது செய்யுமாறு கோரி பிரதேச மக்கள் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடர்பிலான கடமைகளில் ஈடுபடும் நோக்கில் குறித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த உத்தியோகத்தருக்கு நெஞ்சு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் திவுலப்பிட்டி ஹொரகாமுல்ல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சிறுமியின்  கொலையுடன் தொடர்புடையவர்களை தண்டிக்குமாறு கோரி பத்து கிலோ மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று சுமார் 300-400 பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தற்போது இந்தப் பெண்கள் திவுலப்பிட்டி நகரில் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

குருந்தூரில் புத்தர் சிலை நிறுவுதல் தடுத்து நிறுத்தம்

wpengine

2019 ஆம் ஆண்டின் உலகின் வசீகரமான கடற்கரைகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை கடற்கரை

wpengine

இலங்கைக்கான துரும்பு, இலங்கைக்கு எதிராக பாவிக்கவுள்ள திட்டம் குறித்து ரூட் அம்பலம்…

wpengine