உள்நாட்டு செய்திகள்

கை குண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது..



மொரவக – நெலுவ நகரில் கை குண்டு ஒன்றுடன் காலி – ஓபான பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் இன்று(28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்து கொண்டிருந்த உந்துருளி ஒன்றை பரிசோதனை செய்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகுரெஸ்ஸ, ஊருபொக்க, கொஸ்மோதர, பிடபெத்தர, கினிதும, நெலுவ, இமதுவ, யக்கலமுல்ல மற்றும் நீதியாவல போன்ற காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் 19 தேயிலை தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான தங்கபிஸ்கட்கள் மீட்பு…

wpengine

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

எவன்கார்ட் கப்பலின் கெப்டன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine