உள்நாட்டு செய்திகள்

கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் அச்சுக்கு கிடைக்கவில்லை..- அரச அச்சகம்



புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு நேற்று(01) அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் கையொப்பம் இட்டிருந்த போதிலும், அது இதுவரை அரச அச்சகத்திற்கு அச்சிட கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உதவி அச்சக அதிகாரி காமினி விக்கிரமசிங்க இது குறித்து தெரிவிக்கையில், குறித்த வர்த்தமானி அறிவித்தல் அச்சிட முன்னர் அதற்கென இலக்கம் ஒன்று வழங்கப்படும் எனினும் அது இதுவரை வழங்கப்படவில்லை எனவும், அதற்கென எந்தவொரு இலக்கமும் ஒதுக்கப்படவும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலினை ஜனவரி மாதம் நடாத்த நேற்று(01) தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

‘சைலன்ஸ் இன் த கோட்’ திரைப்படத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு.

wpengine

அடுத்த மாதம் முதல் சோயாவுக்கான வரி நீக்கம்…

wpengine

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்னிலை சோசலிக் கட்சி பாரிய போராட்டம்

wpengine