உள்நாட்டு செய்திகள்

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள பரக்கும்புற பகுதியில் 03 கைக் குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைக்குண்டுகளை, ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் வைத்திருக்குமாறு அவருக்கு வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து, குறித்த இராணுவ வீரரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பாராளுமன்ற அமர்வை பிற்போடும் வர்த்தமானியை இரத்து செய்ய கோரி மனு தாக்கல்..

wpengine

‘சினோபார்ம்’ நான்கு மாவட்டங்களுக்கு

wpengine

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுணத்தீவில் இரு காவற்துறை கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்

wpengine