உலக செய்திகள்

கேரளாவில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 187 ஆக உயர்வு…



இந்தியாவில் பருவ மழை காலத்தில் இதுவரை 7 மாநிலங்களில் 774 பேர் மழை வெள்ளத்துக்கு உயிரிழ ந்துள்ளதுடன், இதில் அதிகபட்சமாக கேரளாவில் 187 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது.

கடும் மழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங் பார்வையிட்டு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அடுத்த வாரம் ஓணம் பண்டிகை, உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாம்பு படகு போட்டி ஆகியவை ஆரம்பமாகவுள்ள நிலையில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சவுதி அரேபியா கூட்டுப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி…

wpengine

ஐ.எஸ். இடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கவே துருக்கி ரஷ்ய போர்விமானத்தை சுட்டது – புதின்

wpengine

சீனாவில் தொடரும் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” கொள்கை

wpengine