உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 575,545 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 13,238,121 பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58,881 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 7,698,371 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு 3,479,483 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 138,247ஆக காணப்படுகிறது.

Related posts

இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்

wpengine

சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு

wpengine

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 2000 பேர் மீட்பு..

wpengine