Top Story 3உள்நாட்டு செய்திகள்

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – பொலிஸ் நிலையத்தில் உள்ள 35 கையடக்க தொலைபேசிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி அதிகாலை விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகளின் பயணப் பொதிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய பொருட்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வஜிர ரத்நாயக்க தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் பிரதேச மக்களின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 கையடக்க தொலைபேசிகள், பயணப் பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பேருந்து நடத்துனரின் டிக்கெட் புத்தகமும், பணமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்த டிக்கெட் புத்தகத்தைத் தேடி பொலிஸார், இராணுவம் மற்றும் கிராம மக்கள் பல இடங்களில் தேடியும், இன்றுவரை அது கிடைக்கவில்லை.

சாரதி மரணமடைந்துள்ளதோடு, நடத்துனரும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதன் காரணமாக விபத்து நடந்த நேரத்தில் எத்தனை பயணிகள் பேருந்துக்குள் இருந்தார்கள் என்பதை சரியாகக் கூற முடியாது எனவும் பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 22 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவர் விளக்கமறியலில்

wpengine

தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

இன்று முதல் மேலதிகமாக 5 ரயில்கள் சேவையில்

wpengine