உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சியின் நடைபவனிக்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் தொடர்புகள் கிடையாது – துமிந்த



கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடைபெறவுள்ள நடைபவனிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது எனவும், பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சார்பாகவோ எதிராகவோ எந்தவொரு நடைபவனியையும் நடாத்த கட்சி எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லை.

எதிர்க் கட்சியில் அமர்ந்துள்ள ஸ்ரீ ல.சு.க.யின் சிலர் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி ஊடகங்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இதற்கும் ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையெனவும் அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் புதிய அறிக்கை

wpengine

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

wpengine

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பை பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு..

wpengine