உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் சிறுவன் ஒருவன் இணைந்துக் கொண்டது தொடர்பில் விசாரணை.



கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரையில் சிறுவன் ஒருவன் இணைந்துக் கொண்டது தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த முறைபாடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறுவர்  அதிகார சபையின்  ஊடகப் பேச்சாளர் எதிரிவீர குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான சம்பவங்களுக்கு சிறுவர்களை ஈடுபடுத்துவதானது சிறுவர்களின் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பாதயாத்திரை நிகழ்வில் சிறுவனின் செயற்பாடுகள் தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியுள்ளதோடு, பல தரப்பினரினதும் விமர்சனத்துக்கும் குறித்த பிரச்சினை உள்ளாகியிருப்பதும்  குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=6awZbaACNvI” width=”560″ height=”315″]

Related posts

சோபித தேரரின் மரணம் தொடர்பிலான விசாரணையின் தாமதம் குறித்து நீதிமன்றம் கேள்வி

wpengine

புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

wpengine