உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணி…



தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணியொன்றை ஸ்தாபிக்க, நடவடிக்கை எடுத்து வருவதாக, EBRLF கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின் பின்னரே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு, அரசியல் இலாபம் கருதி செயற்படுவதால், மக்கள் சிரமங்களுக்குள்ளாகின்றனர். ஆதலால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக புதிய அணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், கூட்டமைப்பிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்த்து ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

####

Related posts

மத்திய மாகாண ஆளுனர் காலமானார்.

wpengine

பசில் தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்

wpengine

கொரோனாவால் தொழிலை இழந்தோர் கவனத்திற்கு

wpengine