உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் SLPP இணங்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இணங்காது என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கூட்டமைப்பினால் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், எனது கைகளுக்கு அது இன்னும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால் அதற்கு இணங்க முடியாது. கூட்டமைப்பு முன்வைக்கும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. நாடு எமக்கு முக்கியம். நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

எங்கள் உணர்வுகளை மதித்து வர்த்தமானியை உடன் வெளியிடுங்கள்

wpengine

மிளகு இறக்குமதியானது உடனடியாக நிறுத்தம்…

wpengine

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine