உள்நாட்டு செய்திகள்

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்புமனுவில் கையொப்பமிட்டாலும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டணி வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ள மைத்திரி தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சியில் வேட்புமனு பெற்றுக்கொள்ள தீர்மானம் மேற்கொண்டுள்ளமையினாலும், கூட்டணி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படுவதனாலும் வாசதேவ நாணயக்காரவுக்கு இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போல் இதற்கு முன்பும் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையினால், இதுவரையிலும் கூட்டணியின் வேட்புமனு பட்டியலை ஒப்படைக்காமையினாலும் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் மாற்றங்கள் இடம்பெற்றால் மக்களுடன் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துவதற்கும் தான் தயார் என அவர் கூறியுள்ளார்.

(riz)

 

 

 

Related posts

கராபிடிய வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு…

wpengine

சம்பிக்கவின் உறுப்புரிமையினை ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கினார்…

wpengine

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

wpengine