உள்நாட்டு செய்திகள்

“கூட்டணியின் தேசிய அரசாங்கத்தைக் கலைத்து தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால்..” சட்ட வல்லுநர்கள் யோசனை..



கூட்டணியின் தேசிய அரசாங்கத்தைக் கலைத்து ஏதாவது ஒரு கட்சி தனி அரசாங்கம் அமைக்க நேரிட்டால், அந்த அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பிரகாரம் தனிக் கட்சியொன்று அரசாங்கம் அமைக்கும் போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது குறித்து கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹ தெரிவிக்கையில்; 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தில் தனி அரசாங்கம் ஒன்று அமையும் போது அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், கூட்டரசாங்கம் என்பதற்கு வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் எதுவும் கூறப்படவில்லை.

தனிக் கட்சியொன்று தமக்குரிய போதிய பெரும்பான்மைப் பலம் இல்லாத போது வேறு ஒரு கட்சியை கூட்டணியாக சேர்த்தால், அது தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவுக்குள் வருவதற்கும் இடம்பாடுள்ளது. இதனால், அவ்வாறான ஒரு அரசாங்கத்துக்கு 30 இற்கு அதிகமாக அமைச்சர்களை கொண்டிருக்க முடியும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

#rishma

Related posts

ஹரினின் தந்தை காலமானார்

wpengine

சப்பாடு இன்மையால் பாடசாலைகளில் மயங்கி விழும் பிள்ளைகள்..!

wpengine

நாமலுக்கு எதிரான வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

Azeem Kilabdeen