வாழ்க்கை

குழந்தைகள் நொறுக்குக்தீனி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்



(FASTNEWS|COLOMBO) – உங்கள் குழந்தைகளை சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அளவுக்கு மீறி சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

வரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.

# குறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.

# அளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.

# சோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

# மேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும். எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.

# குழந்தைகளுக்கு கீரை பருப்பு மசியல், வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.

Related posts

முகப்பருக்களை விரட்ட, பெருஞ்சீரகத்தை இந்த பொருளோடு சேர்த்து பாருங்கள்…

wpengine

பருக்கள், கரும்புள்ளிகளுக்கு இந்த 7 குறிப்புகள் போதும்…

wpengine

உங்கள் கண்களை அழகாக காட்ட வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?

wpengine