உள்நாட்டு செய்திகள்

குளிரூட்டி வசதியைக் கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை…



மீன், பால் மற்றும் காய்கறி வகைகளை எடுத்துச் செல்லும் போது பாதிப்பு ஏற்படாத வகையில் குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று கடற்றொழில் மற்றும் நீரியியல் வள கிராமிய பொருளாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி சீனா மற்றும் மலேஷிய பிரதிசதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த இந்த பேச்சுவார்த்தையின் போது, குறிப்பிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் போது இவற்றின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இதனை மேற்கொள்ளுவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குளிரூட்டி வசதியைக்கொண்ட முச்சக்கர வண்டிகளை கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் போது அவற்றுக்கான கடன் வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரரய்ச்சி கூறினார்.

Related posts

பிடியாணையினை மீளப் பெறுமாறு கோரி ராஜித மனு

wpengine

இராணுவ ஆட்சியை முறியடித்து ஆங்சாங் சூகியின் கட்சி முன்னிலையில்

wpengine

பகிரங்கமாய் மன்னிப்பு கோரினார் ஹரின்

wpengine