உள்நாட்டு செய்திகள்

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஆராயப்பட்ட போதே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின்றி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட குறித்த பொலிஸ் பரிசோதகர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்பு..

wpengine

தனிமைப்படுத்தல் பகுதிகளை கண்காணிக்க Drone

wpengine

சிறுபான்மை சமூகத்தின் எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் தருணம் இது – ரிஷாட்

wpengine