விளையாட்டு

குற்றச்சாட்டுக்களை எதிர்த்து தனுஷ்க குணதிலக்க மேன்முறையீடு..



ஒரு நாள் போட்டிகள் ஆறில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனுஷ்க குணதிலக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

அண்மையில் இடம் பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விதியை மீறி நடந்து கொண்டமை தொடர்பில் தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 ஒரு நாள் போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வருடாந்த சம்பளத்தில் 20% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அணியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளல், போட்டிகளுக்கு இடை நடுவே விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், மதுபானம் அருந்துதல், போட்டிகளுக்காக உரிய நேரத்தில் சமூகமளிக்காமை, உடற் தகுதி சோதனையில் கலந்து கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

wpengine

இலங்கையின் வரலாற்றுத் தோல்வியினை அடுத்து டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி…

wpengine

இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

wpengine