உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குறை நிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் 16 அன்று



அண்மையில் குறை நிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் விசாரணை நடத்த சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் அடங்கிய குழு எதிர்வரும் 16ம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கும் என அந்தக் குழுவின் உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தொடர்ந்தும் கூறுகையில்;

நாடாளுமன்ற வளாகக் கட்டத்தில் நேற்று(10) முற்பகல் கூடிய இந்தக் குழு, குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பின் போது எழுந்த சர்ச்சை பற்றி கலந்துரையாடியது.

இந்த விடயம் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் கூடவுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக விசாரணைக் குழு அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

 

Related posts

நாட்டில் பராமரிப்பின்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்..!

wpengine

தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்

wpengine

ரஞ்சனின் பொது மன்னிப்பு குறித்து நீதி அமைச்சர் கருத்து!

News Editor