விளையாட்டு

குறைந்த இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் குவித்து மொமினுல் ஹக் சாதனை…



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் மொமினுல் ஹக் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று(31) பங்களாதேஷத்தின் சிட்டாகாங் நகரில் தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 374 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர் மொமினுல் ஹக் அபாரமாக விளையாடி 175 ஓட்டங்கள் குவித்து களத்தில் உள்ளார்.

160 ஓட்டங்கள் எடுத்த போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ஓட்டங்களை ஹக் தொட்டார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் எடுத்த பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையை ஹக் படைத்துள்ளார்.

வெறும் 47 இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் அவர் எடுத்துள்ளார். இதற்கு முன்னர் அந்த அணியை சேர்ந்த தமீம் இக்பால் 53 இன்னிங்சில் 2000 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் அதை ஹக் முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

இந்திய அணி 49 ஓட்டங்களால் முன்னிலையில்.. – சாதிக்குமா இலங்கை அணியினர்..

wpengine

லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு….?

wpengine

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதியற்று வெளியேறியது நெதர்லாந்து அணி

wpengine