Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவி..!

குருநாகலில் தனது வகுப்பாசிரியரால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக மாணவியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுடைய மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச் சம்பவத்தையடுத்து மாணவி சில மருந்து வில்லைகளை உட்கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாணவி தொடர்பில் தெரிய வந்தவை

சியம்பலாவ பகுதியைச் சேர்ந்த அம் மாணவி தரம் 13 இல் கல்வி கற்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி தனது ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அம் மாணவியிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடத்து தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

Related posts

71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது.

wpengine

பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்வோர் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர்..

wpengine

இன்றும் மழை

wpengine