உள்நாட்டு செய்திகள்

குமார் குணரத்னத்திற்கு, ஆஸி குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம்…



முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு, அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக் குடியுரிமையை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் குமார் குணரத்னம் கட்டாயமாக அவுஸ்திரேலிய குடியுரிமையை சட்ட ரீதியாக இரத்து செய்வதோடு, அது குறித்து உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு குணரட்னம் அறிவிக்க வேண்டும் எனவும், இதன் பின்னரே குமார் குணரத்னத்திற்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் குமார் குணரத்னம் தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்யவில்லை.

இதன்படி, எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,குமார் குணரத்னம் அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்கின்றேன் என எஸ்.பி நவீன்ன தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

மத்தளை விமான நிலையத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள்

wpengine

ஆதாரங்கள் இன்றி கைதுகள் இடம்பெறாது

wpengine

பாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine