உள்நாட்டு செய்திகள்

குணவர்த்தனவின் பதவி யாருக்கென ரணில் நாடு திரும்பியதும் முடிவு செய்யப்படும் – கபீர் ஹசீம்



மறைந்த அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்திற்கு, புதிய ஒருவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் தெரிவு செய்யவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, காணி அமைச்சராக பதவி வகித்து வந்த எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன நேற்றையதினம் காலமானார்.

இந்நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிசர்லாந்து சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

எதிர்வரும் 8ஆம் திகதி அரசாங்கம் கவிழ வாய்ப்பு – சன்ன ஜயசுமண..!

wpengine

டக் அவுட் பட்டியலில் டில்ஷானை முந்திய உமர் அக்மல்…

wpengine