உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் பெரேராவினது தடையினை நீக்க கிரிக்கெட் வாரியம் போராட்டம்



போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள குசல் பெரேராவினது, போட்டித்தடையினை வெகுவிரைவில் அகற்ற முயற்சிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சுமதிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்; எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் பிற்பாடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேராவினையும் சேர்த்துக்கொள்ள பாரிய முயற்சி எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேரா இவ்வருட உலகக்கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்குகொள்ளாமை அணிக்கு பாரிய இழப்பாகவே கருதப்பட்டது எனவும் சுமதிபால மேலும் தெரிவித்திருந்தார்.

ஊக்கமருந்து பாவித்தமை குறித்த தடைக்கு குசல் பெரேராவிற்கு 4 வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

News Editor

3வது தெற்காசிய டயஸ்போரா மாநாட்டிற்காக பிரதமர் சிங்கப்பூர் விஜயம்

wpengine

கோட்டாவுக்கு எதிரான வழக்கு; தடை உத்தரவு நீடிப்பு

wpengine