Top Story 1உள்நாட்டு செய்திகள்

கீத் நொயார் கடத்தல் – முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர்.

பத்திரிகையொன்றின் ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர் கீத் நொயார், 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர்கள் உட்பட சந்தேக நபர்கள் சிலர் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

சங்காவுக்கு பதிலாக களத்தில் மேத்யூஸ் ஆட்டம்

wpengine

பதவியை இராஜினாமா செய்யவும் தயார்

wpengine

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine