உள்நாட்டு செய்திகள்

கீதா நடாளுமன்றிற்கு உள்நுழைய தடை விதிக்கவில்லை.. – சபாநாயகர்…



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தடை விதித்திருப்பதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சபாநாயகர் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்கவுக்கு சாதாரண பிரஜையாக பாராளுமன்றத்துக்கு செல்ல எந்தவித தடையும் இல்லை என குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களுடன் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை காரணமாக அண்மையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#####

Related posts

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்…

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி முன்னிலையில்…

wpengine

எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine