உலக செய்திகள்

கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் நிலநடுக்கம்…



கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் இன்று(25) அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் உள்ள கோமாண்டோர்ஸ்கியே ஒஸ்ட்ரோவா தீவில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் இன்று(25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் உருவான இந்நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

எனினும், இந் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

wpengine

இந்தோனேசியா பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

wpengine

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம்களை மீளத் திறக்க அனுமதி…

wpengine