உள்நாட்டு செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு..



கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, கிழக்குப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை(19) ஆரம்பமாகுமென, பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

ஆகையால், இறுதியாண்டு மாணவர்கள், இன்று(18) மீண்டும் பல்கலைக்கழகத்துக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 1ம், 2ம், 3ம் ஆண்டு மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 08ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினரும் தீர்மான அடிப்படையில் சுமுகமான முடிவை எட்டியதையடுத்து, பல்கலைக் கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

wpengine

இன்று(19) பெரிய வெள்ளி தினம்…

wpengine

கடலுக்கு செல்ல வேண்டாம்

wpengine