ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிளி பிடிக்கப் போன சிறுவனை பொந்துக்குள் இருந்து கடித்தது நாகபாம்பு


தென்னை மரத்தில் ஏறிகிளி பிடிக்க முற்பட்ட பாடசாலை மாணவனை நாகபாம்பு தீண்டியது. இந்தச் சம்பவம் சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது.

 

மல்லாகம் மகா வித்தியாலத்தில் தரம்  10இல் கல்விகற்கும் மாண வனான ரவி மோகனதாஸ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன்  பட்ட தென்னைமரத்தில உள்ள பொந்தில் கிளி பிடிக்கும் முகமாககையை மரப்பொந்தினுள் விட்டுள்ளார்.

இந் நிலையில் பொந்தில் இருந்த நாகபாம்பு அவரை தீண்டியுள்ளது. அதனை அறியாது வீட்டுக்கு சென்ற சிறுவன் தனக்கு கையில் ஏதோ கடித்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆயினும் சிறுவனின் கை மிகவும் வீங்கியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமடைந்து வருகின்றான் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

Related posts

ஒபாமாவின் மகளை திருமணம் செய்ய 90,000 அமெரிக்க டாலர் வரதட்சணை

wpengine

ஒரு கோடி ரூபாய் செலவில் நாய்களுக்கு பூங்கா… (photos)

wpengine

எதிர்வரும் 72 மணி நேரத்தினுள் தாக்கவுள்ள லுபான் புயல்…

wpengine