உலக செய்திகள்

கிளின்டரின் பாலியல் சேட்டைகள் குறித்து ஹிலாரிக்கு எதிர்க்கட்சி அமைச்சர் கிண்டல்



அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவர் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஆவார்.

தற்போது ஹிலாரி கிளிண்டன் பொது மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அதற்கான பிரசாரம் நடந்தது. அதில் ஹிலாரியுடன் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் எம்.பி. காதரீன் புருதோம் ஓ’பிரைனும் பங்கேற்றனர்.

பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காதரீன் இடைமறித்து ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டனின் ‘செக்ஸ்’ லீலைகள் குறித்து கேலி – கிண்டலுடன் கேள்விகள் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ஹிலாரி ‘‘உங்களது பேச்சு மிகவும் மரியாதை குறைவாகவும், தரமற்றதாகவும் உள்ளது. நான் அது போன்று ஒருபோதும் உங்களை பற்றி பேச மாட்டேன்’’ என அடக்கத்துடன் பதில் அளித்தார்.இருந்தும் காத்ரீன் ஓ’பிரைன் அது குறித்து விடாமல் உரத்த குரலில் சத்தமிட்டபடியே இருந்தார்.

ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது அவரது உதவியாளர் மோனிகா லெவன்ஸ்கியுடன் வைத்திருந்த செக்ஸ் உறவு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Related posts

கிறிஸ்தவ தேவாலய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி [VIDEO]

wpengine

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் சக்தி வாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ..

wpengine

Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு கனேடிய அரசு அனுமதி

wpengine