உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி – கொக்காவில் பஸ் விபத்து இருவர் பலி



கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி பழைய முறுகண்டி கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதிய பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான ஜெகநாதன் உதயஜோதி மற்றும் 29 வயதான தோமஸ் சாள்ஸ் நெரஞ்சன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சாரதி நித்திரை கொண்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை குறித்து TNA அதிருப்தி.

wpengine

வலுக்கும் கொரோனா மரணங்கள்

wpengine

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிப்பு

wpengine