உலக செய்திகள்

கிளாஸ்கோ நகரத்தில் உள்ள கலைப்பள்ளியில் தீ விபத்து…



ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது.

இந்த கலைப்பள்ளியில் மாகிந்தோஷ் கட்டிடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதையொட்டி அமைந்து உள்ள இரவு விடுதி வளாகம், இசை அரங்கத்துக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த தீ விபத்து, கலைப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை

wpengine

அண்டார்டிகாவிலும் கொரோனா

wpengine

உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் மீட்பு

Azeem Kilabdeen