உலக செய்திகள்

கிறிஸ்தவ தேவாலய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ள டெக்ஸாஸ் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் மீது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிதாரி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்

அத்துடன், வழிபாட்டுத் தலங்களுக்கும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் வகையிலான சட்ட திருத்தம் ஒன்று கடந்த செப்டெம்பர் மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவிலிருந்து சென்ற எமிரேட்ஸ் – 777 போயிங் விமானம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.

wpengine

ரஷ்ய ஆயுதக்கிடங்கில் தீ – 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

wpengine

இந்தோனேஷியாவில் 6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்…

wpengine