ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதத்துடன் 23 மாதம் சிறைத் தண்டனை..



போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பிலான குறித்த வழக்கு நேற்று(22) விசாரணைக்கு வந்திருந்த நிலையில், மாட்ரிட் நீதிமன்றில் நேரில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபராத தொகையை கட்ட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நீதிபதி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதமும், 23 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார். ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல் முறையாக ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதில்லை. இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறை தண்டனையில் இருந்து தப்பினார்.

Related posts

“வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்போம்” என்ற தெலுங்கானா துணை முதல்வருக்கு சிந்து கொடுத்த பதிலடி!

wpengine

செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஜேவிபி

wpengine